என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இங்கிலாந்து இந்தியா ஒருநாள் தொடர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா ஒருநாள் தொடர்"
வலது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஜேசன் ராய் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று 5 மணிக்கு தொடங்குகிறது. 2-வது போட்டியில் இங்கிலாந்து பீல்டிங் செய்யும்போது தொடக்க வீரர் ஜேசன் ராயின் வலது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.
இதனால் இன்றைய போட்டியில் அவர் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்புதான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.
ஒருவேளை உடற்தகுதி பெறாவிடில் மாற்று வீரரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் சாம் பில்லிங்ஸை அவசரமாக அழைத்துள்ளது. ஜேசன் ராய் இந்தியாவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் 35 பந்தில் 38 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 42 பந்தில் 40 ரன்களும் சேர்த்தார்.

ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் நீடிப்பதைவிட, இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வதே முக்கியமானது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தொடரை 1-2 என இழந்தால் கூட மாற்றம் ஏதும் வராது.
இருந்தாலும் தரவரிசையை விட இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவதே முக்கியமானது என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘இந்தியா மிகவும் வலுவான அணி. முதல் போட்டியில் அவர்களது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இதனால் தொடரில் அவர்களை வீழ்த்தினால் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கும். குறிப்பாக நம்பிக்கை அதிகரிக்க முக்கியமானதாக இருக்கும்.
2-வது போட்டியில் பெற்ற வெற்றியை எல்லா போட்டிக்கும் எடுத்துச் சென்றால் சிறந்ததாக இருக்கும். அதேபோல் ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகமிக முக்கியமானது.
நாளை நடக்கும் போட்டியில் குலதீப் யாதவ் சிறப்பாக பந்து வீசலாம். அதேபோல் உமேஷ் யாதவும் சிறப்பாக பந்து வீசலாம். இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிப்பதை விட இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றுவதே சிறந்தது’’ என்றார்.

குல்தீப் யாதவ் 6 விக்கெட் வீழ்த்திய போதிலும் பென் ஸ்டோக்ஸ், பட்லர் அரைசதங்களால் இந்தியாவிற்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார்.
இந்திய அணியில் 32 மாதங்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னாவும், 10 மாதங்களுக்குப் பிறகு கேஎல் ராகுலும் இடம்பிடித்தனர். வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் அறிமுகமானார்.
ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து பவர் பிளேயான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.
இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்ந நிலையில்தான் 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்த நிலையில் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட்டையும், 5-வது பந்தில் பேர்ஸ்டோவ்-ஐயும் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதன் மூலம் 10 பந்தில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து ரன் குவிப்பிற்கு தடைபோட்டார். தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இதனால் இங்கிலாந்து அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினார். 5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த பட்லர் மிரட்டலாக விளையாடினார். ஜோஸ் பட்டர் 45 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய பட்லர் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் விக்கெட் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்தார். அதோடு மட்டுமல்லாமல் டேவிட் வில்லியே விக்கெட்டையும் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
அதன்பின் வந்த மொயீன் அலி 23 பந்தில் 24 ரன்களும், அடில் ரஷித் 16 பந்தில் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியாவிற்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. உமேஷ் யாதவ் 9.5 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சாஹல் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

நாட்டிங்காம் ஒருநாள் போட்டியில் 10 பந்தில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரை சீர்குலைத்தார் குல்தீப் யாதவ். #ENGvIND #KuldeepYadav
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து பவர் பிளேயான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.
இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்ந நிலையில்தான் 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்த நிலையில் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட்டை யும், 5-வது பந்தில் பேர்ஸ்டோவ்-ஐயும் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதன் மூலம் 10 பந்தில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து ரன் குவிப்பிற்கு தடைபோட்டார். தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். #ENGvIND #KuldeepYadav #INDvENG

இந்தியாவிற்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியுள்ளார். #ENGvIND
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் இங்கிலாந்து வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டனர். வலைப் பயிற்சியின்போது இங்கிலாந்து அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் ஆன அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு காயம் ஏற்பட்டது.
இதனால் இன்றைய போட்டியில் அவர் களம் இறங்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்துள்ள ஹேல்ஸ்க்குப் பதிலாக தாவித் மலன் அழைக்கப்பட்டுள்ளார். #ENGvIND #INDvENG #AlexHales

×

X